கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்
X

காங்கிரஸ் கட்யின் சார்பில் நடந்த மக்கள் விழிப்புணர்வு நடைபயணம்

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

மத்திய மோடி அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையிழப்பு போன்றவை ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் இது தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சி அகில இந்திய தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆணைக்கிணங்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வேண்டுகோள் படியும் மத்திய மோடி அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட வேலையிழப்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி இன்று மேற்கொண்டது.

அதன்படி நாகர்கோவில் வடசேரியில் உள்ள தேசதந்தை காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கிய இந்த பிரச்சார நடைபயணத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தொடங்கி வைத்தார், இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai tools for education