கடலுக்குள் கவிழ்ந்த ஆட்டோ: சடலமாக ஆட்டோ டிரைவர் மீட்பு

கடலுக்குள் கவிழ்ந்த ஆட்டோ: சடலமாக  ஆட்டோ டிரைவர் மீட்பு
X
கன்னியாகுமரியில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கடலுக்குள் கவிழ்ந்த விபத்தில், ஆட்டோ டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் 56, ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவில் மேல்மிடாலம் பகுதிக்கு வந்துவிட்டு திரும்பி செல்லும்போது கடற்கரை ஓரம் வழியாக சென்றுள்ளார்.

அப்போது கட்டுபாட்டை இழந்த ஆட்டோ, கடலுக்குள் விழுந்தது, இதில் காளிதாஸ் கடலுக்குள் மூழ்கிய மாயமாகி இருந்தார். இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள மீனவர்கள், கருங்கல் போலீசாருக்கும் தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீ அணைப்பு துறையினர், ராட்சத கிரேன் மூலம் ஆட்டோவை மீட்டனர். தொடர்ந்து மாயமாகி போன காளிதாஸை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வேளையில், மிடாலத்திற்கும் மேல்மிடாலத்திற்கு இடைப்பட்ட தூண்டில் வளைவு பகுதியில் ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கி உள்ளது. அந்த இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது, அது அருள்தாஸ் என தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!