குமரியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

கன்னியாகுமரி அருகே உள்ள பெரியவிளை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் மது வாங்க ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர், அப்போது மந்தாரம்புதூர் பகுதியைச் சேர்ந்த பால்சன் என்பவர் மது வாங்க வந்துள்ளார்.
வரிசையில் நிற்காமல் வந்த உடன் கவுண்டர் வழியாக கையை நுழைத்து மதுபாட்டில் கேட்டுள்ளார். அப்போது கடை சூப்பர்வைசர் சந்திரபோஸ் வரிசையில் வந்தால் தருவேன் என கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பால்சன் டாஸ்மாக் கடையில் இருந்த தடுப்பு வேலியை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, சந்திரபோசை தாக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சந்திரபோஸ் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிக்குமார் நாயர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu