குமரியில் கலை இழந்தது ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடு

குமரியில் கலை இழந்தது ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடு
X

ஆடி பெருக்கு தினமான இன்று குமரியில் கோயில்கள் கலையிழந்தன.

குமரியில் கொரோனா அச்சம் காரணமாக ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய் வழிபாடுகள் கலை இழந்தது.

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குமரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் அங்கிருந்து குமரிமாவட்டத்தினுள் தங்கு தடையின்றி நுழையும் வாகனங்கள் மற்றும் கேரளா மக்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆடி செவ்வாய் வழிபாடு அம்மன் கோவில்களில் கலைகட்டும், பல கோவில்களில் ஆடி வெள்ளி ஆடி பெருக்கு நாளில் கொடை விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டு மொத்தமாக கோவில் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஆடி பெருக்கு, மற்றும் ஆடி செவ்வாய் கிழமை வழிபாடு கலை இழந்தது, மேலும் குமரியில் பல்வேறு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் பக்தர்கள் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!