குமரியில் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மூதாட்டி

குமரியில் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மூதாட்டி
X

குமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மனநலம் பாதித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மனநலம் பாதித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருந்தங்கோடு பகுதியை சேர்ந்தவர் மேரி சேவியர். மூதாட்டியான இவர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவரின் நடவடிக்கைகளை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது எங்கள் ஊரில் போக்குவரத்திற்காக நான் ஒரு மிகப்பெரிய பாலம் கட்டி உள்ளதாகவும் இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள் என கூறினார்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என கூறினார். இதனால் மூதாட்டி மனநலம் பாதித்தவர் என்பதை அறிந்து சுதாரித்து கொண்ட போலீசார் அவரை முன்னேறி செல்ல விடாமல் தடுத்தனர்.

இதனை தொடர்ந்து தன்னை தடுக்க கூடாது என போலீசாரிடம் மல்லு கட்டிய மூதாட்டி நீண்ட நேரமாக அங்கு நின்று விட்டு போலீசாரை திட்டியவாறே வெளியேறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil