குமரியில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா காெண்டாட்டம்

குமரியில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா காெண்டாட்டம்
X

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஏசு பிறப்பை எடுத்துரைக்கும் கிறிஸ்துமஸ் விழா, குமரி அதிமுக சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இயேசு பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் வரும் 25-ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் விழாவை விமரிசையாகக் கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா இப்போதே களைகட்டி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை அடைய முழு உழைப்பையும் செலுத்துவோம் என கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய அதிமுகவினர் அதனை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால், அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!