குமரியில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள்

குமரியில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள்
X

குமரியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடினர்.

குமரியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடினர்.

தென் இந்தியாவில் திரைத்துறையில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த சிவாஜி கணேசனின் இடத்தை நிரப்ப உலக அளவில் இன்று வரை எவரும் இல்லை என்ற அளவிற்கு தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.

தான் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் தனக்காக இன்றளவும் ரசிகர்களை கொண்ட சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிவாஜி ரசிகர்கள், பொது மக்கள் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!