கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரமா தலைமையில் போலீசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈத்தாமொழி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின் போது வாகனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து வாகனத்தையும் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சஜித் மற்றும் பறக்கை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கிஷோர் குமார் என்பதும் தெரியவந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!