காரில் பயணி தவறவிட்ட 2 பவுன் தங்க சங்கிலி: நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர்

காரில் பயணி தவறவிட்ட 2 பவுன் தங்க சங்கிலி: நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர்
X

குமரியில் வாடகை காரில் தவறவிட்ட பயணியின் 2 பவுன் தங்க சங்கிலியை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர்.

குமரியில் வாடகை காரில் தவறவிட்ட பயணியின் 2 பவுன் தங்க சங்கிலியை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் மணி, மதுரையில் சில வருடங்களாக வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது காரில் ஐந்து நாட்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்மணி பயணம் மேற்கொண்டபோது எதிர்பாராவிதமாக அவரது இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை காரில் தவறவிட்டார்.

இதனை அறிந்த பெண்மணி வாகன ஓட்டுனரிடம் செல்போனில் பேசி தகவலை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வாகன ஓட்டுனர் அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது பூஜா தவறவிட்ட 2 பவுன் தங்கச்சங்கிலி கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று நாகர்கோவில் வந்த மணி கோட்டார் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தங்க சங்கிலியை ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து பூஜாவை வரவழைத்த போலீசார் சங்கிலியை ஒப்படைத்தனர்.

Tags

Next Story