குமரியில் கொரோனா சிகிச்சையில் 1400 பேர்

குமரியில் கொரோனா சிகிச்சையில் 1400 பேர்
X
குமரி மாவட்டத்தில் 1400 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் - சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது வரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் 1400 க்கு மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக தபால் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேபோன்று நாகர்கோவில் ரயில்வே காலனி பகுதியில் ஒரே வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று அங்கு இருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக கொரானா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இது போன்று தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil