குமரியில் ஒரே நாளில் 1069 வழக்குகள் - 166 வாகனங்கள் பறிமுதல்

குமரியில் ஒரே நாளில் 1069 வழக்குகள் - 166 வாகனங்கள் பறிமுதல்
X
குமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் 1069 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 166 வாகனங்கள் பறிமுதல்.

கோரோணா பரவலை தடுக்க அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசின் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி வாகனங்களில் செல்பபர்களுக்கு இ பதிவு கட்டாயம் என்ற நிலையில் குமரியில் 47 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது முககவசம் அணியாமல் வந்ததாக 831 நபர்கள் மீதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 72 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 166 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 166 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story