கன்னியாகுமரியில் கஞ்சாகடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் கைது

கன்னியாகுமரியில்  கஞ்சாகடத்தலில் தொடர்புடைய  குற்றவாளிகள் இருவர் கைது
X
குமரியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டையில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரியில் போலீசார் நடத்திய வேட்டையில் கஞ்சாகடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிராக குறிப்பாக கஞ்சவிற்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஈடுபட்டு வருகிறார்.

கஞ்சா விற்பனை தொடர்பாக கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலை வழக்கிற்கு பின்னர் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கை குமரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனை மற்றும் நடவடிக்கைகளில் ஏழு நாட்களில் குமார் 80 க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை கும்பலை போலீசார் கைது செய்தனர்

இதனிடையே புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் மற்றும் போலீசார் முசிறி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அபீஷ்(23) மற்றும் பைங்குளம் பகுதியை சேர்ந்த ஷாஜகான்(25) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் கஞ்சா விற்பனைக்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது, பிடிபட்ட 2 பேர் மீதும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future