சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
X
கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்த தமிழக அரசு கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடைபெற அனுமதி அளித்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளில் ஒரு பகுதியாக கோவில்களில் இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஆன்மீக பூமி என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 70 நாட்களுக்கு பின்னர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் ஆரவாரத்துடன் சரண கோஷங்கள் முழங்கிய பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!