தீவிர வாகன சோதனை - களமிங்கிய குமரி எஸ்.பி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து பின்னர் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று போலீசார் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது வெளியே சுற்றியவர்கள் போலீசாரிடம் உண்மை விவரங்களை தெரிவித்தால் மட்டுமே அவர்கள் மேற்கொண்டு வாகனங்களில் செல்ல அனுமதித்தனர்.
இந்த வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒவ்வொரு காவல் தடுப்பிலும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பணியில் ஈடுபாடும் காவலர்கள் கவனமுடன், பாதுகாப்புடன் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறிய எஸ்.பி நேரடியாக களத்துக்கு சென்று அவ்வப்போது காவலர்களிடம் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu