பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.
X
கன்னியாகுமரி மாவட்டம்-

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் அஞ்சுகிராமம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பால்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அவர்களை பிடித்த போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மணிகண்டன்(28), செல்வன்(45), வேலு(45), சேகர்(41) மற்றும் ராஜசேகர்(29) என்பது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக சூதாடிய அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சூதாடிய கார்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!