டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு பெரும் வரவேற்பு

டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு பெரும் வரவேற்பு
X

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள வீடியோ டிஜிட்டல் விழிப்புணர்வு போர்டுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் புகார்கள் கொடுக்க வருகின்றனர். இதில்பொது மக்கள் அதிகமாக வருவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள நேரமாக மாற்றும் வகையில் பொதுமக்களின் பார்வைக்காக வீடியோ கொண்ட டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.

மாஸ்க் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியின் அவசியம், நோய் தொற்றில் இருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வது, மற்றும் விபத்து இல்லாமல் இருக்க பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள், மோசடி சம்பவங்களில் சிக்கி கொள்ளாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் வைக்கப்பட்டு உள்ள இந்த டிஜிட்டல் போர்டின் செயல்பாட்டை மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் திறந்து வைத்தார்.அதன்படி, புகார் மனு கொடுக்க வரும் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது, இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பயனுள்ளதாக அமையும் என்பதால் போலீசாரின் இந்த முயற்சி பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!