மீண்டும் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: குமரியில் திமுக கூட்டணி

மீண்டும் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: குமரியில் திமுக கூட்டணி
X

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அதே கூட்டணி தொடர்வதால் மீண்டும் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் மறைந்த எம் பி வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த், நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனும், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் ராஜேஷ்குமாரும் நேற்று நாகர்கோவிலில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அண்ணா, ஜீவானந்தம், கலைவாணர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!