10 நாளுக்கு ஒருமுறைதான்... நாகர்கோவில் மாநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை!

10 நாளுக்கு ஒருமுறைதான்... நாகர்கோவில் மாநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை!
X
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை

நாகர்கோவில் மாநகராட்சியில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்பதால் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த 2019ம் ஆண்டுதான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே இருந்த நகராட்சி பகுதிகளுடன் அருகாமையிலிருந்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் சிலவற்றையும் சேர்த்து மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து கோடைக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இந்த தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட முடியாமலே இருக்கிறது.

தற்போது முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் மாநகர பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதற்கு தீர்வு காண மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களும் பல கிலோமீட்டர்கள் சென்று தண்ணீர் வாங்கி வரும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிலைமையைப் பயன்படுத்தி பலர் தண்ணீரை அதிக விலைக்கு விற்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாமல் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலமாகவும் போர்வெல் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்வது என் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் போதுமான அளவு தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்கிற புகாரும் எழுந்து வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture