கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மாவட்டத்தில் 631 இடங்களில் மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் 620 துணை ராணுவத்தினர், 2200 போலீசார், மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் என சுமார் 5000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
ai future project