கொரோனா விதிமுறை மீறல்: 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்

கொரோனா விதிமுறை மீறல்: 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக அபராதமாக ரூபாய் 11 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!