குமரியில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு, பிரசவித்த தாய்மார்கள் நலன் என தாய் சேய் நல பணிகளை கையாளும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு அவர்கள் ஏற்கனவே செய்து வரும் பணியுடன் சேர்த்து கொரோனா தடுப்பூசி வழங்குதல், தடுப்பூசி போடுபவர்களுக்கான பட்டியல் தயாரித்தல் என பல்வேறு பணிகளை கூடுதலாக சுமத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது எந்த விடுமுறையும் இல்லாமல் அளவிற்கு அதிகமாக பணி சுமை திணிக்கப்படுவதாகவும் இதனால் பணி சுமையுடன் மனவேதனை அடைவதாகவும் கிராம சுகாதார செவிலியர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும், டேட்டா பதிவு செய்ய தனி குழு அமைக்க வேண்டும், மலை கிராமங்களில் தடுப்பூசி செலுத்த தேவையான பொருட்களை அந்தந்த கிராமங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அவர்கள் மனு அளிக்க சென்ற போது மாவட்ட ஆட்சியர் வேறு பணிக்கு சென்றதால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை தெரிவிப்போம் என கூறி ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu