பொதுமக்களை கண்டுகொள்ளாமல் வீடியோ கேம்: இ-சேவை பெண் அலுவலர் அலட்சியம்

பொதுமக்களை கண்டுகொள்ளாமல் வீடியோ கேம்: இ-சேவை பெண் அலுவலர் அலட்சியம்
X
பொதுமக்களை பற்றி கவலை படாமல் வீடியோ கேம் குமரி ஆட்சியர் அலுவலக இ சேவை மைய பெண் அலுவலரின் வீடியோ வைரல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இ சேவை மையம் ஆதார் கார்டு உள்பட அனைத்து விதமான இ சேவைகளும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சேவைகள் பெற காலை முதல் மாலை வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.1

ஆனால் இந்த இ சேவை மையத்தில் பணியாற்றுபவர்கள் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்காமல் அலட்சியமாக பேசுவதாகவும், ஏதாவது கேள்வி கேட்டால் அழைக்களிக்கும் செயலை செய்வதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் கைகுழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் டோக்கன் பெற்று காத்திருக்க பொதுமக்கள் தேவையையும், வேதனையையும் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் பெண் பணியாளர் செல்போனில் விடியோ கேம் விளையாடி கொண்டு இருக்கும் அவல நிலையை இ சேவை மைய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த காட்சிகள் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பொதுமக்கள் பாதிப்படைய செய்யும் இந்த செயலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா