நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி

நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி
X
நாகர்கோவிலில் உள்ள தடுப்பூசி மையங்களில் மாநகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் உள்ள 8 மையங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே இன்று தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் சிறப்பு மையங்களில் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்மூலம் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சுகாதாரமான நோய் தொற்று இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதால் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!