குமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும்

குமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும்
X
கன்னியாகுமரியில் முதல் அலையில் பயன்படுத்திய பழைய மெத்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி கோவிட் கேர் சென்டர்களில் புதிய மெத்தை, படுக்கை விரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் அதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், கல்லிலூரிகள் போன்றவற்றில் கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகர்கோவில் அருகே அமைந்துள்ள கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 250 படுக்கைகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இதனிடையே கேர் மையத்தில் கொரோனா முதல் அலையின் போது பயன்படுத்தப்பட்ட கட்டில், மெத்தை, போர்வைகளையே மீண்டும் பயன்படுத்துவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கேர் சென்டர்களில் பழைய மெத்தை போர்வை பயன்படுத்தாமல் புதிய மெத்தை போர்வைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture