நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு
நாகர்கோவில் மாநகராட்சியில் திறக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாடு மையம்..
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழு அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் தேர்தல் விதி மீறல்கள் சம்மந்தமான புகார்களை பதிவு செய்வதற்காக 24 மணி நேர கட்டுப்பாடு மையம் திறக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பொதுமக்கள் 04652 230984 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu