கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் கொடுக்காத மாமன் கொலை: மருமகன் கைது

கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் கொடுக்காத மாமன் கொலை:  மருமகன் கைது
X

கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் தராத மாமனை கொலை செய்த மருமகன்.

கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் தாய் மாமன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவதாணு, ஓய்வு பெற்ற தாசில்தாரான இவரது வீட்டில் அவரின் தங்கை மற்றும் தங்கை மகன் விக்னேஸ்ராமும் வசித்து வந்தனர்.

விக்னேஸ்ராம் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வருகிறார், இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மருமகனான விக்னேஸ் ராமை சிவதாணு பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று விக்னேஸ் ராம் செலவுக்கு பணம் கேட்டு சிவதாணுவை தொந்தரவு செய்துள்ளார், ஆனால் பணம் மது குடிப்பதற்காக பணம் கேட்கிறார் என தெரிந்து கொண்டார். சிவதாணு. இனதால் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ் ராம் தனது மாமாவின் கழுத்தை நெரித்தும் காலால் மிதித்தும் சிவதாணுவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விக்னேஸ் ராம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த கோட்டார் போலீசார் விரைந்து சென்று சிவதாணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய விக்னேஸ் ராமை கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!