திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது - உதயநிதி ஸ்டாலின்

திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது - உதயநிதி ஸ்டாலின்
X
திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது கஜானா காலியாக இருந்தது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முந்தைய அதிமுக அரசு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் சுமையை உருவாக்கி விட்டு சென்று இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் அதிமுக ஆட்சியை விட்டு செல்லும் போது 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு கஜானாவை காலியாக்கி சென்றனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

அதிமுக ஆட்சியின்போது ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது, ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத ஆட்சி காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டும் தான், அதேபோன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகவும் முகஸ்டாலின் உள்ளார் என வடநாட்டு பத்திரிகைகள் கூறுகின்றன என தெரிவித்தார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !