மாநகராட்சியின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ் தொடக்கம்

மாநகராட்சியின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ் தொடக்கம்
X

நாகர்கோயில் மாநகராட்சி அலுவலகம் (பைல் படம்)

நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ் தொடங்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகர பொதுமக்கள் மாநகராட்சியின் செயல்பாடுகள், கொரோன நோய் தடுப்பு பணிகள், தடுப்பூசி முகாம்கள் விபரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள

நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

https://twitter.com/NAGERCOIL_CORP?s=08 என்ற டுவிட்டர் பக்கத்தில் சென்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த டுவிட்டர் பக்கம் மூலமாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
ai powered agriculture