வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை - கணவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை - கணவர் மீது வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கோட்டார் மேல புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராசிமா ஜாஸ்மின் (24).இவர் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும் தேங்காய்பட்டணம் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த சிராஜூதின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும்,திருமணத்தின் போது 20 சவரன் தங்க நகை, ரூபாய் 1 லட்சம் ரொக்கம், ரூ 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் தனது கணவர் கூடுதலாக ரூபாய் 2 லட்சம் ரொக்கம் ,10 சவரன் தங்க நகை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தனது கணவரின் உறவினர்கள் 7 பேர் உடந்தையாக இருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவர் தன்னுடைய நகைகளை வாங்கிக் கொண்டு என்னை வீட்டுக்கு விரட்டி விட்டார் எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.புகார் மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக விசாரணை நடத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் போலீசார் கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!