தமிழகத்தை பாதாளத்தில் தள்ளிய பெருமை திமுகவை சேரும் : பொன். இராதாகிருஷ்ணன்

தமிழகத்தை  பாதாளத்தில் தள்ளிய பெருமை திமுகவை சேரும் : பொன். இராதாகிருஷ்ணன்
X

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிய பெருமை திமுகவை சேரும் என்றார் பொன். இராதாகிருஷ்ணன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

பின்னர் பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தேர்தல் என்றாலே பணம் பெற்று கொண்டு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை பழக்கப்படுத்தி உள்ளனர், இது வேதனையான ஒன்று, நேர்மையானவர்கள், ஏழைகள் எதிர்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும், இல்லையென்றால் பெரும் பணம் படைத்தவர்கள் தேர்தல் நேரத்தில் தங்களது பணபலத்தையும் அதிகார பலத்தையும் காட்டி வெற்றி பெறும் துரதிஷ்டமான நிலை ஏற்படும்.இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அது நஷ்டமாகத்தான் இருக்கும், பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் என்ற செயலை திமுகவினர் தான் தொடங்கி வைத்தார்கள்.திருமங்கலம் பார்முலாவை இவர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கி இன்று வரை பணம் பட்டுவாடா மூலம் தேர்தலை சந்தித்து தமிழகத்தை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிய பெருமை திமுகவையே சேரும்.

தமிழக மக்களை விலை பொருளாகவும், சந்தை பொருளாகவும் மாற்றிய கேவலமான அரசியலை திமுக நடத்துகிறது, ஏற்கனவே திமுகவினர் பணத்தை கொடுத்து மக்களை குதிரைகளாக ஆக்கி உள்ளது, இனி அவர்கள் கழுதை பேரம் வேண்டுமானால் நடத்துவார்கள் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!