கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரிட்ட தீவிபத்தில் கொரேனா நோயாளிகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கன்னியாகுமரி மாவ்ட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தின் கூடுதல் கட்டிடத்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் மருத்துவ குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப்பரவத்தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங் களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு தீ பரவும் சூழ்நிலை ஏற்பட்டதால் மேல் தளத்தில் இருந்த கொரோனா நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். நடக்கமுடியாமல் தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக உடனடியாக மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மருத்துவ உபகரணங்களும் உடனடியாக மாற்றப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் வந்து தீவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தீ விபத்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu