பல்வேறு பணிகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு
பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி மீன் சந்தை, உழவர் சந்தை, கனக மூலம் சந்தை, வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அம்மா உணவகம் போன்ற இடங்களில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வடசேரி சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை உழவர் சந்தையில் மாற்றி அமைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வடசேரி பகுதியில் காலியாக இருக்கும் இடம் நான்கு சக்கர வாகனங்கள் நிருத்தும் இடமாக செயல்படும் என்றும் அப்போது தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் உடனிருந்தனர். பொறுப்பேற்ற நாள் முதல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மேயரின் தினசரி ஆய்வு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu