கன்னியாகுமரி போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்: போலீஸ் எஸ்.பி வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை போலீசாருக்கு வழங்கினார்.
பெங்களூரில் உள்ள சிலிகான் வால்லே பேங்கின் நிர்வாக இயக்குனர் பிரேமில் டென்னிசன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உதவிடும் நோக்கில் 1 வருடத்திற்கு தேவையான முகக்கவசம் மற்றும் கையுறைகள் போன்ற கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார்.
இதனை காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற்றது, இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பொருட்களை காவலர்களிடம் நேரடியாக வழங்கினார் .
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகுந்த கவனமுடன் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், தடுப்பு பணியில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் காவலர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ள முககவசம் உட்பட பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களை பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் மற்றும் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu