கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.

கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.
X
கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெற்றதால் அதிரடி காட்டி அபராதம் விதித்த மாநகராட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் வியாபாரம் நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் IAS உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா தலைமையில் வருவாய் உதவியாளர்கள் சுதீஷ், ஜெகதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட டீம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது செம்மாங்குடி ரோடு பகுதியில் அரசின் தடையை மீறி ஜவுளி கடைக்கு செயல்பட்டதும், பின் வாசல் வழியாக பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் மேற்கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை இழுத்து மூடினர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஆணையர் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணிற்கு ( 9487038984 ) புகார் அனுப்புமாறு கூறி உள்ளார்.

Tags

Next Story
ai marketing future