காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து வைத்தார்

காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து வைத்தார்
X
காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. காவலர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் காவலர்களின் குழந்தைகள் தங்களுக்கு விளையாட விளையாட்டு பூங்கா அமைத்து தர கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முயற்சியில் காவலர் குடியிருப்பில் காலியாக கிடந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு அழகிய சிறுவர் பூங்கா உருவாக்கபட்டது.

அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்ததோடு காவலர்களின் குழந்தைகள் விளையாடுவதை கண்டு மகிழ்ந்தார், மேலும் அங்கு உள்ள சிறுவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future