நரிக்குறவர் குடும்பத்தை பஸ்சிலிருந்து இறக்கிய விவகாரம்: ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
நாகர்கோவிலில் பஸ்சிலிருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த முதியவர், மூதாட்டி மற்றும் சிறுவன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற பேருந்தில் ஏறிய நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த முதியவர் மற்றும் மூதாட்டி அவர்களுடன் இருந்த சிறுவன் ஆகிய 3 பேரை பேருந்தின் நடத்துனர் இறக்கி விட்டுள்ளார். மேலும் அவர்களின் உடமைகளை தூக்கி சாலையில் வீசி எறிந்த வீடியோ காட்சிகள் சமூக வைரலானது.
இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நெல்லை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்த நெல்சன் என்பவரையும் நடத்துனராக பணிபுரிந்த ஜெயபாலன் என்பவரையும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
நரிக்குறவர் குடும்பத்தினர் பேருந்தில் சக பயணிகளுக்கு இடையூறாக சத்தம்போட்டு கொண்டிருந்ததால் சக பயணிகள் பேருந்து நடத்துனரிடம் நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறியுள்ள அதிகாரிகள் பயணிகளிடம் தரக்குறைவாக நடக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu