மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
X
நாகர்கோவிலில் மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வந்த பூனைகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களாக மாயமாகி கொண்டிருந்தன. இதனால்அப்பகுதி மக்கள் அப்பகுதியில் வளர்ப்புப் பிராணிகள் காணாமல் போவதற்கு ஏதாவது மர்ம விலங்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் தேடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதியில் 12 அடி மலைப்பாம்பு ஒன்று புதருக்குள் பதுங்கிக்கிடந்துது, தேடிக்கொண்டிருந்த பொதுமக்கள் பார்வையில் பட்டது. அருகே சென்றபோது சீறிப்பாய்ந்து அச்சுறுத்தியதாம். இதனிடையே, மலைப்பாம்பை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில நாட்களாக அச்சத்துடன் இருந்த அப்பகுதி மக்கள் இன்று மலைப் பாம்பு சிக்கியதை தொடர்ந்து நிம்மதி அடைந்தனர், குழந்தைகள் அதிகளவில் சுற்றித்திரியும் இப்பகுதியில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பகுதியில், மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் இந்த மலைப் பாம்பு அடித்துக்கொண்டு வந்திருக்கலாம் எனவும் தண்ணீரிலிருந்து கரையேறியதும் உணவுக்காக வளர்ப்பு பிராணிகளை உணவுக்காக பிடித்து சாப்பிட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil