வரி வசூலுக்கு சிறப்பு மையம்: நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமை சிறப்பு வரி வசூல் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில், 2021-2022 நிதியாண்டுக்கான வரிவசூல் நடைபெற்று வருகின்றன. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மாநகராட்சி இயங்காத நிலையில், பலர் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/10/2021) பொதுமக்கள் தங்களின் சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை தொழில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக, காலை 9 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story
ai future project