மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
X

நாகர்கோவிலில் பிரேக் பெயிலியர் லாரி மின் கம்பத்தில் மோதி நின்றது.

குமரியில் பிரேக் பிடிக்காமல் மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரியால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு 22 டயர் கொண்ட லாரி நாகர்கோவில் வந்தது, நாகர்கோவில் மாநகரின் முக்கிய வர்த்தக பகுதியாகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் காணப்படும் கோட்டார் பகுதியில் லாரி வரும் போது லாரியின் பிரேக் செயல்பாட்டை இழந்துள்ளது.

இதனிடையே பிரேக் செயல்பாடு இல்லை என்பதை தெரிந்து சுதாரித்து கொண்டு லாரி ஓட்டுநர் லாரியை அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதவிட்டு நிறுத்தினார், இந்த விபத்தில் மின் கம்பம் சேதம் ஆன நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும் லாரியை மின்கம்பத்தின் மோத செய்யவில்லை என்றால் அங்கிருக்கும் கடைகள் அல்லது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்ற நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்