குமரியில் அதிமுகவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் ஆதரவு

குமரியில் அதிமுகவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் ஆதரவு
X

குமரியில் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்கி உள்ளது.

குமரியில் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது, தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மாநகராட்சி அந்தஸ்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 52 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்கி உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முழு ஆதரவிற்கான அதிகார பூர்வ கடிதம் அதிமுக வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!