கைவினை பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்: கண்காட்சி மூலம் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட விற்பனை நிலையம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் 3 நாட்கள் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட விற்பனை நிலையம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் 3 நாட்கள் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
கைவினை பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்று உள்ளன.
10 சதவிகித தள்ளுபடியுடன் ரூபாய் 100 முதல் 30000 வரை உள்ள மதிப்பிலான பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், சங்கு பொருட்கள், ராசி கற்கள், அலங்கார அணிகலன்கள், சந்தன மரக்கட்டைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்கவர் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu