குமரியை குளிர்வித்த கோடை மழை

குமரியை குளிர்வித்த கோடை மழை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது, கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனிடையே மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, சுசீந்திரம், இரணியல், அருமநல்லூர், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றாறு அணை, மாம்பலத்தாறு அணை, முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய தேவைகள் நிறைவேறுவதோடு குடிநீர் பற்றாக்குறையும் தீரும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்