பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவர்கள்; தேர்வு மையம் முன் போராட்டம்

பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவர்கள்; தேர்வு மையம் முன் போராட்டம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பொது தேர்வை புறக்கணித்த மாணவர்கள் தேர்வு மையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வினாத்தாள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

தற்போதும் அதே முறை பின்பற்றப்படுவதால் அதிக அளவிலான மாணவர்கள் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்களுக்கு இன்று தேர்வு தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றவில்லை என்றால் தாங்கள் தோல்வியை சந்திப்பது நிச்சயம் என கூறியும், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து பொதுதேர்வை புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future