தலைமைக்கு உண்டான தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது: இல.கணேசன் பேச்சு

தலைமைக்கு உண்டான தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது: இல.கணேசன் பேச்சு
X
நாகர்கோவிலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிடும் எம்.ஆர்.காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்த இல.கணேசன், தலைமைக்கு உண்டான தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்,

இந்நிலையில் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதற்மத்திற்குமான தேர்தல் தர்மத்திற்கு ஆதரவாக தமிழர்கள் நலனுக்காக ஆயுதம் ஏந்திய அர்ஜூனன் போன்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்,

தர்மம் வெல்லும், அதர்ம சக்திகள் இந்த தேர்தலில் காணாமல் போவார்கள், தலைமைக்கு உண்டான தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது.அவரது ஒட்டுமொத்த பேச்சும் நல்ல அரசியல் நாகரீகம் அல்லாத பேச்சாக உள்ளது, இந்த ஜென்மத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாது, இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!