எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X

பைல் படம்.

எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!