ஜவ்வாய் நீளும் பாதாள சாக்கடை பணிகள்: குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

ஜவ்வாய் நீளும் பாதாள சாக்கடை பணிகள்: குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை, ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பத்து ஆண்டுகள் ஆன பின்பும் கூட பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. ஆங்காங்கே சாலை தோண்டபட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை இழுத்தடிப்பதாகக்கூறி, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாநகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் செம்மண் சாலைகளாக உள்ளதால் மழை காலங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செல்ல முடியாத ஒரு நிலை ஏற்படுவதாகவும், எனவே செம்மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் இருளப்பபுரம் அருகே மலைபோல் குவிந்திருக்கும் வலம்புரி குப்பைக்கிடங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags

Next Story