பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் உருவான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் உருவான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
X

நாகர்கோவிலில் கட்டுபடுத்தப்பட்ட பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கும் நகராட்சி ஊழியர்கள். 

கொரோனா பாதிப்பால் பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உருவானது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை செட்டி தெருவில் 8 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் தெருக்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகர் நல அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொண்டும் வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து செல்லவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india