நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறப்பு: உற்சாகத்தில் பொதுமக்கள்

நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறப்பு: உற்சாகத்தில் பொதுமக்கள்
X

 நாகர்கோவிலில் பயன்பாட்டுக்கு வந்துள்ள செல்பி பாயிண்ட்.

நாகர்கோவிலில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்ட நிலையில் செல்பி பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தளங்களை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், வடசேரியில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டது. சாலை ஓரத்தில் தேவையான இட வசதியோடு நம்ம நாகர்கோவில் என்ற பெயருடன் திறக்கப்பட்ட இந்த செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் இடத்தில் அமைக்கப்பட்ட இந்த செல்பி பாய்ண்டை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதனிடையே புதிதாக திறக்கபட்ட செல்பி பாயிண்ட் இடத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று தங்கள் நண்பர்கள் மட்டும் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
ai marketing future