சாலையில் கொட்டப்பட்ட மணல், அதிரடி காட்டிய போலீசார்

சாலையில் கொட்டப்பட்ட மணல், அதிரடி காட்டிய போலீசார்
X

நாகர்கோவிலில் சாலையில் கொட்டப்பட்ட மணலை அள்ளி அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசார்.

நாகர்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கெட்டப்பட்ட மணலை அப்புறப்படுத்திய போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மையபகுதியாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் கொண்ட சாலையாகவும் உள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை.

24 மணி நேரமும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும் இந்த சாலை பகல் நேரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.

இந்நிலையில் டதி ஸ்கூல் ரோட்டில் வீடு கட்டுவதற்காக தனி நபர் ஒருவர் போக்குவரத்திற்க்கு இடையூறாக மணலை குவித்து வைத்தால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது,

இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீட்டின் உரிமையாளரிடம் எடுத்து கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

போக்குவரத்து நெருக்கடி குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து சாலையில் குவித்து வைத்து இருந்த மணலை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ததோடு வீட்டின் உரிமையாளரை வரவழைத்து எச்சரித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்