நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை, குமரி ஆட்சியர் தகவல்

நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை, குமரி ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

குமரி மாவட்டத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, குமரி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டிலுள்ள சிற்றார்-2 நீர்த்தேக்கம் ஆலஞ்சோலை மீன் பண்ணையின் மூலம் தரமான நன்னீர் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யப்படுகிறது.

மேலும் மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்த்தெடுக்கப்பட்டு, பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மீன் வளர்ப்போருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே மீன் வளர்ப்போர், மீன் பண்ணையாளர்கள் நன்னீர் மீன்குஞ்சு விரலிகளை அளவிற்கு ஏற்ப உரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன் பண்ணை, சிற்றாறு-2 நீர்த்தேக்கம், லஞ்சோலை, குமரிமாவட்டம் என்ற முகவரியில் மற்றும் தொலைபேசி எண் 04652 227460 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் எனவும் ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா